Advertisement

அருமையான சுவையில் வஞ்சிரம் மீன் வறுவல் செய்முறை!!!

By: Nagaraj Tue, 20 Dec 2022 10:32:23 PM

அருமையான சுவையில் வஞ்சிரம் மீன் வறுவல் செய்முறை!!!

சென்னை: உங்கள் குடும்பத்தினர் பாராட்டுக்களை பெறணுமா... அப்போ வஞ்சிரம் மீன் வறுவல் செய்து கொடுத்து பாருங்கள்.இதை செய்யும் முறை உங்களுக்காக.

தேவையான பொருள்கள்: வஞ்சீரம் மீன் – 1/4 கிலோமிளகாய்த் தூள் – 1 மேஜைக்கரண்டிமிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டிஉப்பு – தேவையானஅளவுஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

chili powder,fish,ginger garlic paste,pepper powder,roast, ,இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், மிளகுத் தூள், மீன், வறுவல்

செய்முறை:முதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும். பிறகு சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். மீன், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி 2 மணி நேரம் ஊற விடவும்.


மீன் நன்றாக ஊறியதும் அடுப்பில் கடாய் அல்லது தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து 2 அல்லது 3 மீன் துண்டுகளைப் போட்டு வறுக்கவும். 5 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். இதே போல் மற்ற மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் ரெடி.

Tags :
|
|