Advertisement

உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் பப்பாளிக்காய் கூட்டு

By: Nagaraj Thu, 09 June 2022 5:53:09 PM

உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் பப்பாளிக்காய் கூட்டு

சென்னை: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பப்பாளிக்காய் கூட்டு செய்து பாருங்கள். ருசியும் அருமையாக இருக்கும். உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும்.
தேவையான பொருட்கள் : பப்பாளிக்காய் (சிறியது) - ஒன்று, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

papaya,coconut,cumin,chilli,eggplant ,பப்பாளிக்காய், தேங்காய், சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள்

செய்முறை:பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் நைசாக அரைத்து கொள்ளவும்.
பப்பாளிக்காயை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். அரைத்த தேங்காய் கலவையை வெந்த பப்பாளிக்காயுடன் சேர்த்து பருப்பும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பப்பாளி கலவையில் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு ரெடி.

Tags :
|
|
|