Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பரங்கிக்காய் பால் கூட்டு செய்முறை

By: Nagaraj Fri, 27 Oct 2023 07:10:43 AM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பரங்கிக்காய் பால் கூட்டு செய்முறை

சென்னை: பரங்கிக்காய் பால் கூட்டு செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் வீட்டு வாண்டுகள் விரும்பி சாப்பிடுவார்கள். பரங்கிகாயில் சாம்பார், கூட்டு, பொரியல், சூப், குழம்பு என செய்யலாம். இது இன்னும் ருசியாக இருக்கும். ஆரோக்கியமானதும் கூட.

தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் துண்டுகள் – 2 கப்அரிசி மாவு – 2 டீஸ்பூன்தேங்காய் துறுவல் – 2 டேபிள்ஸ்பூன்நாட்டு சர்க்கரை – 1டீஸ்பூன்உப்பு – தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – 1 கொத்துகாய்ந்த மிளகாய் – 2

parangi kai,salt,country sugar,rice flour,curry paste ,பரங்கி காய், உப்பு, நாட்டு சர்க்கரை, அரிசி மாவு, காரக்குழம்பு

செய்முறை: தேங்காய் துறுவலை மைய அரைக்கவும். அரிசி மாவினை சிறிது நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும். பாத்திரத்தில் பரங்கிகாய் துண்டுகளை போட்டு முழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.

காய் வெந்ததும் உப்பு, நாட்டு சர்க்கரை மற்றும் கரைத்து வைத்த அரிசி மாவினை சேர்த்து கிளறவும். பின் தேங்காய் விழுதினை சேர்த்து கிளறி, பின் 2 நிமிடங்களில் இறக்கவும்.

பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். அருமையான ருசியில் பரங்கிகாய் பால் கூட்டு ரெடி. கார குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|