Advertisement

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பரங்கிக்காய் சேமியா பாயசம்

By: Nagaraj Tue, 06 Sept 2022 10:36:11 AM

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பரங்கிக்காய் சேமியா பாயசம்

சென்னை: குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பரங்கிக்காய் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

பரங்கிக்காய் - கால் கிலோ
சேமியா - 100 கிராம் (பொடிக்கவும்)
சர்க்கரை - தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
பால் - 1 லிட்டர் (காய்ச்சவும்)
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரிபருப்பு - 10
உலர் திராட்சை - 10

parangikai,semiya,sugar,ghee,water ,பரங்கிக்காய், சேமியா, சர்க்கரை, நெய், தண்ணீர்

செய்முறை: பரங்கிக்காயின் தோலை சீவி விதையை நீக்கி துருவிக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சேமியாவை கொட்டி வறுக்கவும். பின்னர் பரங்கிக்காயை கொட்டி சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். அது கரைந்ததும் பாலை சேர்க்கவும். நெய்யில் முந்திரி பருப்பையும், உலர்திராட்சையையும் வதக்கி பாயசத்தில் சேர்க்கவும். ஏலக்காய் தூளையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறலாம். சூப்பரான பரங்கிக்காய் சேமியா பாயாசம் ரெடி.

Tags :
|
|
|