Advertisement

அருமையான சுவையில் பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு சாம்பார் செய்முறை

By: Nagaraj Sun, 25 Sept 2022 9:05:15 PM

அருமையான சுவையில் பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு சாம்பார் செய்முறை

சென்னை: பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு சாம்பார் செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்


பாசிப்பருப்பு கால் கப்
உருளைக்கிழங்கு 2
தக்காளி-2
புளி நெல்லிக்காய் அளவு(இந்த சாம்பார் புளிப்பு குறைவாக இருக்கும் விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
உப்பு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி(மைல்டான காரமாக இருக்கும் விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை
எண்ணெய் ஒரு தேக்கரண்டி
கடுகு வெந்தயம் சீரகம் தலா ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் 1
கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
பெருங்காயம் கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1 அல்லது 2

algae,potato,tomato,tamarind,turmeric powder ,பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, தக்காளி, புளி,  மஞ்சள் பொடி

செய்முறை: கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பாசிப்பருப்பு மஞ்சள் பொடி உருளைக்கிழங்கு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்.


வதக்கிய தக்காளியில் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் உப்பு வேக வைத்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு கலவை, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

Tags :
|
|
|