Advertisement

ஆரோக்கியம் அளிக்கும் பனங்கிழங்கில் பாயசம் செய்முறை

By: Nagaraj Fri, 20 Oct 2023 2:43:14 PM

ஆரோக்கியம் அளிக்கும் பனங்கிழங்கில் பாயசம் செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பனங்கிழங்கில் பாயசம் செய்து சாப்பிடுங்கள். ருசியும் பிரமாதமாக இருக்கும்.

தேவையானவை: பனங்கிழங்கு - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், பனை வெல்லக் கரைசல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

coconut milk,cardamom powder,roasted cashews,raisins ,பனங்கிழங்கு, தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை

செய்முறை: பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

Tags :