Advertisement

அசத்தல் சுவையில் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா செய்முறை

By: Nagaraj Tue, 04 Oct 2022 10:34:39 PM

அசத்தல் சுவையில்  பட்டாணி உருளைக்கிழங்கு குருமா செய்முறை

சென்னை: பொதுவா நான் வெஜ் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். நான் வெஜ் செய்துட்டா வழக்கமா சாப்பிடுறத விட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவோம். கறி குழம்ப விட செம டேஸ்டான ஒரு ரெசிபி பற்றி தெரிந்து கொள்வோம். ஆனால் இது வெஜ். அசத்தலான சுவைல வெஜ் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 2
உருளைக்கிழங்கு- 2
ஊற வைத்த பட்டாணி- 1 கப்
புதினா இலைகள்- 6
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 3 தேக்கரண்டி
பிரியாணி இலை- 1
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 2

அரைக்க தேவையானவை:

சின்ன வெங்காயம்- 6
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/4தேக்கரண்டி
சோம்பு-1/4 தேக்கரண்டி
பட்டை- 1
ஏலக்காய்- 1
கசகசா- சிறிதளவு
இஞ்சி- ஒரு இன்ச்
பூண்டு- 7 பற்கள்
தேங்காய்- ஒரு சிறிய துண்டு

pea potato kuruma recipe in amazing taste ,பெரிய வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, புதினா

செய்முறை: முதல்ல அரைக்க கொடுத்து இருக்க பொருட்கள ஒரு மிக்ஸி ஜார்ல போட்டு கொஞ்சமா தண்ணீர் ஊற்றி மைய அரைச்சு தனியா வையுங்க. அடுத்து ஒரு குக்கர அடுப்புல வச்சு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிங்க.


இப்போ இதுல நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்குங்க. வெங்காயம் வதங்கின பிறகு தக்காளி சேர்த்து வதக்குங்க. தக்காளி நல்லா வதங்கினதும் அரைச்சு வச்சு இருக்க பேஸ்ட் சேர்த்து கிளறி விடுங்க. இது கூட கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்க.


மசாலாவோட பச்சை வாசனை போனதும் நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறுங்க. தேவையான அளவு உப்பு போட்டு கலக்கிக்கோங்க. இப்போ 3/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 3 விசில் வர விட்டு இறக்கினா செம டேஸ்டான உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா ரெடி. இது தேங்காய் பால் சாதம், நெய் சோறு, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாத்துக்கும் அருமையா இருக்கும்.

Tags :