Advertisement

பேரீச்சம்பழ பாயசம் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Mon, 31 July 2023 8:11:22 PM

பேரீச்சம்பழ பாயசம் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சேமியா பாயசம், கடலைப்பருப்பு, பால் பாயசம், அவல் பாயசம் செய்து இருப்பீர்கள். இப்போ செம டேஸ்டில் பேரீச்சம்பழ பாயசம் செய்வோமா. இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம்.
இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நாவை இனிக்க வைக்கும் இனிப்புகளான பேரீச்சம் பழம் மற்றும் வெல்லத்துடன் தன் அதிவாசனையால் மனதை ஈர்க்கும் ஏலக்காய்த் தூள் சேர்த்து இனிக்க இனிக்க பேரீச்சம்பழ பாயசம் செய்யலாமா. வாங்க.
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1 கப்தேங்காய்ப் பால் – 1 கப்வெல்லம் நறுக்கியது – 1/4 கப்ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகைபச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகைஉப்பு – 1 சிட்டிகை

cardamom powder,coconut milk,dates,green camphor,jaggery ,ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால், பச்சைக் கற்பூரம், பேரீச்சம்பழம், வெல்லம்

செய்முறை: கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும். ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப் பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப் பாலையும் உபயோகிக்கலாம்.

Tags :
|