Advertisement

குழந்தைகள் விரும்பும் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்முறை

By: Nagaraj Fri, 09 Oct 2020 8:23:27 PM

குழந்தைகள் விரும்பும் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்முறை

குழந்தைகள் விரும்பும் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் அவர்களுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்து கொடுக்க நிமிடத்தில் காலியாகும்.

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு -1/2கி
கரம் மசாலா - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
ஃபுட் கலர் -சிறிதளவு
சீரக தூள் - 1டீஸ்பூன்
சோள மாவு- 1 டீஸ்பூன்
பிரட் தூள்-சிறிதளவு
பிரட் ஸ்டிக்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு

chili powder,garam masala,ginger garlic paste,cumin powder ,மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரக தூள்

செய்முறை: உருளைக்கிழங்கை சுத்தம் செய்து குழைய வேக வைக்கவும். இதனை தோல் நீக்கி நன்கு மசிக்கவும். இத்துடன் ஃபுட் கலர், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள் சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைந்த கிழங்கை பிரட் ஸ்டிக்கில் விருப்பமான வடிவில் செய்து வைத்து கொள்ளலாம். இதனை சோள மாவை நீரில் கலக்கி வைத்த கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிரட்டிய கிழங்கை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடான, சுவையான , குழந்தைகளுக்கு மிக விருப்பமான வடிவத்தில் உருளைக்கிழங்கு லாலி பாப் தயார். சாஸ் உடன் சூடாக பரிமாற அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :