Advertisement

அருமையான சுவையில் ருசித்து மகிழ உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு

By: Nagaraj Fri, 18 Sept 2020 4:04:39 PM

அருமையான சுவையில் ருசித்து மகிழ உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு

உருளைக்கிழங்கு பிடிக்காத பலருக்கும்கூட இந்த உருளைக் கிழங்கு- பட்டாணி கூட்டு மிகவும் பிடிக்கும், இது காரம் இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்

தேவையானவை:

உருளைக் கிழங்கு-3
பட்டாணி- 1/2கப்
வெங்காயம்- 3
தக்காளி-1
இஞ்சி- 1 துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய்- 3
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கொத்தமல்லி- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு

mustard,peas,peas,potatoes,peas ,கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணி

செய்முறை: குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பட்டை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து தண்ணீர், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவவும்.
இப்போது அனைவருக்கும் பிடித்தமான உருளைக் கிழங்கு- பட்டாணி கூட்டு ரெடி.

Tags :
|
|