Advertisement

சூப்பர் சுவையில் உருளைக்கிழங்கு பட்டாணி சாதம்

By: Monisha Thu, 06 Aug 2020 4:47:51 PM

சூப்பர் சுவையில் உருளைக்கிழங்கு பட்டாணி சாதம்

குழந்தைகள் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சைப் பட்டாணி - கால் கப்
விழுது - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

potatoes,peas,rice,ginger,garlic ,உருளைக்கிழங்கு,பட்டாணி,சாதம்,இஞ்சி,பூண்டு

செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்துதோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அதில் உதிரியாக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூப்பரான உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் ரெடி.

Tags :
|
|
|