Advertisement

அருமையான சுவையில் உருளைக்கிழங்கு பிங்கர்ஸ் செய்முறை

By: Nagaraj Tue, 05 Sept 2023 12:40:12 PM

அருமையான சுவையில் உருளைக்கிழங்கு பிங்கர்ஸ் செய்முறை

சென்னை: குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காமினேஷன் உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ். பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் சில வீடுகளில் உள்ள அம்மாக்கள் சமைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அந்தவகையில் நாம் செய்யும் ஸ்நாக்ஸ் வகைகள் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், அத்துடன் சுவையானதாகவும் இருக்க வேண்டும். இதன்படி, மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காமினேஷன் உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ்.

தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு - 4 ரவை -1 கப் கறிவேப்பிலை - தேவையான அளவு கொத்தமல்லி இலை - தேவையான அளவு பச்சை மிளகாய் - 4 வெங்காயம் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

onions,green chillies,coriander,curry leaves,potatoes ,வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உருளைக்கிழங்கு

செய்முறை: முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு ஸ்நாக்ஸ் என்பதால் சாப்பிடும் போது வாயில் அகப்படக்கூடாது. பின்னர் ஒரு பவுல் எடுத்து அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதற்கு தேவையான உப்பு மற்றும் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக நீரை கொதிக்க விட வேண்டும்.

கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் சளித்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறும்போது போது கட்டி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் அந்த மாவுக்கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வேகவைத்த தோலுரித்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாவுக்கலவையுடன் வெட்டி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். இதனை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும். பின்னர் இந்த மாவுக் கலவையை விரல்கள் போன்று உருட்டி எடுத்து தனியாக ஒரு பிளேட்டில் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விரல்கள் போன்று தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஃபிங்கர்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் எதிர்பார்த்த சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ் தயார்.

Tags :
|