Advertisement

குடும்பத்தினர் ருசியாக சாப்பிட இறால் மிளகு வறுவல் செய்முறை

By: Nagaraj Mon, 07 Nov 2022 11:02:39 PM

குடும்பத்தினர் ருசியாக சாப்பிட இறால் மிளகு வறுவல் செய்முறை

சென்னை: உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிட காரசாரமான இறால் மிளகு வறுவல் செய்து பாருங்கள்.


தேவையான பொருட்கள்:

இறால் – 500 கிராம்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் – தேவைக்கு ஏற்ப

shrimp,salt,curry leaves,chili,garlic,pepper ,இறால், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய், பூண்டு, மிளகு

செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து, பின் மிளகு தூள், மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கி வெந்ததும் இறக்கினால் சுவையான இறால் மிளகு வறுவல் தயார். உங்கள் குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள். உங்களையும் பாராட்டுவார்கள்.


Tags :
|
|
|
|