Advertisement

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி செய்முறை

By: Nagaraj Sat, 14 Nov 2020 10:19:48 PM

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி செய்முறை

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி.. பாசிப் பயறில் அதிக அளவு புரதச் சத்தானது உள்ளது, அந்தப் பாசிப்பயறில் பொதுவாக குழம்பு, பொரியல், சுண்டல், கடையல் வகைகளையே சாப்பிட்டு இருப்போம். தற்போது பாசிப் பயறு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:

இட்லி அரிசி- 100மில்லி
உளுந்து- 50 மில்லி
பாசிப்பயிறு – 100 மில்லி
வெந்தயம் - 2 ஸ்பூன்
உப்பு-1/2 ஸ்பூன்

algae idli,dill,rice,protein , பாசிப்பயிறு இட்லி, வெந்தயம், அரிசி, புரதச்சத்து

செய்முறை: பாசிப்பயிறு, அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் தனித் தனியாக ஊறவைத்துக் கொள்ளவும். அடுத்து உளுந்தை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரிசி, பாசிப்பயிறு, வெந்தயம் சேர்த்து அரைத்து தனித்தனியாக உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். காலை எழுந்து வழக்கமாக இட்லி செய்வது போல் இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவிட்டு எடுத்தால் பாசிப்பயிறு இட்லி ரெடி.

Tags :
|
|