Advertisement

புரதச்சத்துக்கள் நிறைந்த பன்னீர் கிரேவி செய்முறை

By: Nagaraj Mon, 16 Jan 2023 6:55:43 PM

புரதச்சத்துக்கள் நிறைந்த பன்னீர் கிரேவி செய்முறை

சென்னை: பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும் . பன்னீரை பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.

இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

தேவையான பொருட்கள்:
100 கிராம் - பனீர்1 - வெங்காயம்1 - தக்காளி1 - பச்சைமிளகாய்1/4 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது1/2 டீஸ்பூன் - மிளகாய்தூள்1/4 - கசூரி மேத்தி1/4 டீஸ்பூன் - கரம் மசாலாதேவையான அளவு - உப்புதேவையான அளவு - எண்ணெய்

garam masala,fried paneer,kasuri methi,tomato,gravy ,கரம் மசாலா, வறுத்த பனீர், கசூரி மேத்தி, தக்காளி, கிரேவி

செய்முறை: பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்துமசியும் வரை வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிசிறுதீயில் வைத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் வற்றி கிரேவி கெட்டியானதும் கசூரி மேத்தி, கரம் மசாலா, வறுத்த பனீர் சேர்த்து 2 நிமிடம் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

Tags :
|