Advertisement

சட்டென்று எளிமையாக செய்யலாம் ரொட்டி பக்கோடா

By: Nagaraj Tue, 28 Mar 2023 10:39:14 PM

சட்டென்று எளிமையாக செய்யலாம் ரொட்டி பக்கோடா

சென்னை: வீட்டிலேயே சட்டென்று செய்வோம் வாங்க ரொட்டி பக்கோடா. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை : ரொட்டி – 5 துண்டுகள், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, உப்பு – தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலை மாவு – 4 மேசைக்கரண்டி, பெருங்காயம் தூள் – 2 சிட்டிகை, காய்கறி – கால் கப்.

bread,healthy,snacks, ,10 நிமிடங்களில்,பக்கோடா, ரொட்டி

செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சீரகத்தை பொடியாக அரைக்கவும். காய்கறிகளை இறுதியாக நறுக்கவும். பிரட் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் 4 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான உருண்டையாக வரும் வரை பிசையவும். பக்கோடா மாவு தயாரான பிறகு, அதை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது சிறிதாக பக்கோடா மாவை சேர்த்து அனைத்து பக்கமும் பொன்னிறமாக வதக்கவும். இந்த மிக எளிதான பக்கோடா ரொட்டி எண்ணெய் குடிக்காது. வழக்கமான வெங்காய பக்கோடாவை விட கண்டிப்பாக சுவை அதிகம். வெறும் ஐந்தே நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த ப்ரெட் பக்கோடாவை தக்காளி சாஸுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும். மாலையில் டீயுடன் சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும்.

Tags :
|
|