Advertisement

காலை உணவை சத்தானதாக மாற்ற ராகி மசாலா இட்லி

By: vaithegi Tue, 14 June 2022 6:50:21 PM

காலை உணவை சத்தானதாக மாற்ற  ராகி மசாலா இட்லி

தேவையான பொருள்கள் :
கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,குடைமிளகாய், ஒரு கேரட், ஒரு வெங்காயம், இஞ்சித் துண்டு,பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள்

salt,ragi,itli flour ,உப்பு, ராகி,இட்லி மாவு

செய்முறை :
நான்கு கப் ராகி மாவைக் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். முக்கால் கப் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கிவிட்டிருக்கும். இந்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, இட்லிகளை ஆறவைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவையுங்கள்.

கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அதில் ஒரு குடைமிளகாய், ஒரு கேரட், ஒரு வெங்காயம், இஞ்சித் துண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள். சிறிதளவு பச்சைப் பட்டாணி, மஞ்சள் தூள் போட்டு வதக்குங்கள். பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டியெடுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

Tags :
|
|