Advertisement

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி; இந்த கோடைக்கு அருமையான ருசி

By: Nagaraj Fri, 07 Apr 2023 10:26:59 AM

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி; இந்த கோடைக்கு அருமையான ருசி

சென்னை: ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி செய்வோம் வாங்க. இந்த கோடைக்கு குளுகுளுவென்று இருக்கும். இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தான் ஸ்பெஷல். லஸ்ஸியை அலங்கரித்து பரிமாறும் ஸ்டைல் தான் இதன் ஹைலைட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையானவை :
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கிளாஸ்சர்க்கரை - 8 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுமலாய் (பால் ஆடை) - தேவைக்குபால் கீரிமுடன் சேர்ந்தது (திக்கான காய்ச்சியது.) - ஒரு கப்ஐஸ் க்யூப்ஸ்குங்குமப்பூ - சிறிது.ஏலக்காய் - 2அலங்கரிக்க பால் ஆடை, க்ரீம், பாதாம், பிஸ்தா சீவல்.

pistachio,almond,lassi,thick curd,fragrant ,பிஸ்தா, பாதாம், லஸ்ஸி, கெட்டி தயிர், மணம்

செய்முறை: கெட்டியான தயிரை சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் கடைய வேண்டும். அதை கடையும் போது நுரைத்து வரும். நடுவே கெட்டி க்ரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும்.

இதில் குங்குமப்பூவும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க,பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுவார்கள். இதன் ருசியும் மணமும் தனி ஸ்பெஷல்.

பன்னீர் எசன்ஸ், பழங்கள் லஸ்ஸியில் சேர்ப்பது உண்டு. பாதாம், பிஸ்தா சீவல் தூவி அதை ரிச்சாக கொடுப்பர். பானை நம் வீட்டில் இல்லையெனில் மிக்ஸியில் விப்பர் மோடில் அடித்து விட்டு விட்டு இயக்க நுரைத்து வரும். அருமையான ருசியில் இருக்கும்.

Tags :
|
|