Advertisement

வாழைக்காய் சின்னவெங்காயம் சேர்த்து கறி செய்யும் முறை

By: Nagaraj Sun, 05 June 2022 2:50:17 PM

வாழைக்காய் சின்னவெங்காயம் சேர்த்து கறி செய்யும் முறை

சென்னை: வாழைக்காய் வாய்வு என்று பலரும் ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் அதில்தான் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளன. வாழைக்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை


முற்றிய வாழைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் பூண்டு - 12
பல் - 8
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
தேங் காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 4
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப் பிலை
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

salt,turmeric,grated chilli,banana,shallots ,உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், வாழைக்காய், சின்ன வெங்காயம்

செய்முறை

- வாழைக்காயை தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, பெருஞ்சீரகத்தை சேர்த்து மையாக அரைக்கவும்.

- மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

- பிறகு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

- பின்னர் வாழைக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு மூடி வைக்கவும்.

- 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து...

- அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

Tags :
|
|