Advertisement

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சாமை அரிசி உப்புமா செய்முறை

By: Nagaraj Thu, 14 Sept 2023 06:35:21 AM

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சாமை அரிசி உப்புமா செய்முறை

சென்னை: காலை நேரத்தில் உடலுக்கு சத்தான சாமை அரிசி உப்புமா செய்து உங்கள் குடும்பத்தினரை ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்: சாமை அரிசி – ஒரு கப் (வேகவைத்தது), எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது), சிகப்பு குடைமிளகாய் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), உப்பு – தேவைகேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு

sour rice,salt,onion,chillies. ,சாமை அரிசி, உப்புமா, வெங்காயம், குடைமிளகாய்.

செய்முறை: ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், சிகப்பு குடைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிய பிறகு, வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து பரிமாறவும். அருமையான ருசியில் சாமை அரிசி உப்புமா உங்கள் குடும்பத்தினரை அசத்திவிடும்.

Tags :
|
|