Advertisement

சப்பாத்திக்கு செம சைட் டிஷ்... நவாபி கோப்தா கறி செய்முறை

By: Nagaraj Sat, 06 May 2023 8:22:54 PM

சப்பாத்திக்கு செம சைட் டிஷ்... நவாபி கோப்தா கறி செய்முறை

சென்னை: எத்தனை நாளைக்குதான் சப்பாத்திக்கு குருமா செய்து சாப்பிடுவது. சூப்பர் நவாபி கோப்தா கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோமா.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 150 கிராம், வெங்காயம் – 150 கிராம், தக்காளி – 2, துருவிய தேங்காய் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி இலைகள் – சிறிது, கறிவேப்பிலைகள் – சிறிது, இனிக்காத கோவா – 100 கிராம், பான் – 100 கிராம், மாவு – 1 தேக்கரண்டி, மைதா மாவு – 1 தேக்கரண்டி, திராட்சை 20 கிராம், முந்திரி – 20 கிராம், பாதாம் – 20 கிராம், தனியா – 2 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, கசகசா – 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, ஏலக்காய் – 2, கிராம்பு – 4, பட்டை – 2, எண்ணெய், ப்ரெஷ் கிரீம் தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

chappathi,idly,parotta, ,சப்பாத்தி, சூப்பர், நவாபி கோப்தா கறி

செய்முறை: உருளைக்கிழங்கை மசிக்கவும். தக்காளியை அரைக்கவும். கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை ஊற்றி அதில் குங்குமப்பூவை கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பனீர், கோவா, சோள மாவு, மைதா மாவு, திராட்சை, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, இவை அனைத்தையும் சப்பாத்தி மாவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், முந்திரி, பாதாம், தனியா, கசகசா, சீரகம், தேங்காய் துருவல், இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை, 70 மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் பேஸ்ட் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும்.

கலவை கொதித்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். 10 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் பொரித்த உருண்டைகளை அதில் இறக்கவும். சிறிது நேரம் கழித்து அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். ‘நவாபி கோப்தா கறி’ தயார். இதை சப்பாத்தி, தோசை, இட்லி அல்லது பரோட்டாவுடன் பரிமாறலாம்.

Tags :
|