- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- சாம்பாரில் புளிப்பு அதிகமா, சாதம் உதிரியாக இருக்க வேண்டுமா! உங்களுக்காக சில யோசனைகள்
சாம்பாரில் புளிப்பு அதிகமா, சாதம் உதிரியாக இருக்க வேண்டுமா! உங்களுக்காக சில யோசனைகள்
By: Nagaraj Mon, 22 June 2020 11:41:07 AM
சமையல் செய்யும் போது ஒரு சில தவறுகள் நடந்து விடும். புளிப்பு அதிகமாகி விடும். உப்பு கூடுதலாகி விடும். இதுபோன்று நிகழும் போது என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.
சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப்போது துவரம்பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாகிவிடும். அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு செய்வது சாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.
ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகிவிட்டால், கறிகளின் மேல் ஒரு
டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசி மாவு உறிஞ்சிக்
கொண்டு விடும். கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும்
தூவலாம்.ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்கு மொறுமொறுப்பை
தராது.
பாயசம் நீர்த்துவிட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு
டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து பாயசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டால் பாயசம் கெட்டியாகிவிடும்.
சாதம்
வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து
குக்கரில் வைக்கவும். ஆவி வந்ததும்,”வெயிட்’ போட்டு உடன் அணைத்து விடவும்.
சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.
சில
சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக
இருக்கும். அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு
எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம் பொலபொல என்று வெண்மையாகவும்
இருக்கும்.
ரசத்தில் புளி குறைந்துவிட்டால், கைவசம் மாங்காய் பொடி
இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி சேர்த்தால் தேவையான புளிப்பை
தந்துவிடும்.