Advertisement

சில அருமையான சமையலறை குறிப்புகள் உங்களுக்காக!

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:04:02 PM

சில அருமையான சமையலறை குறிப்புகள் உங்களுக்காக!

சில அருமையான சமையலறை குறிப்புகள் குடும்பத் தலைவிகளுக்காக.

சாறு பிழிந்த எலுமிச்சை பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல், உருளைகிழங்கு, வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும். முருங்கைக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைக்க ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

kitchen tips,lemon juice,fry,banana ,சமையலறை குறிப்புகள், எலுமிச்சம்பழச்சாறு, பொரியல், வாழைத்தண்டு

கீரையை வேகவிடும்போது, சிறிது எண்ணெய் அதனுடன் சேர்த்து வேகவைத்தால், கீரை பசுமையாக, ருசியாக இருக்கும். வாழைப்பூவை நறுக்கிச் சுத்தம் செய்வதே பெரிய வேலை. இதோ ஓர் எளிய முறை. பூவை ஆய்ந்ததும் முழுசாக மிக்ஸியில் போட்டு இரண்டே சுற்று சுற்றினால் போதும். ஒரே அளவில் பூவாக உதிரும்.

வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது, அதனுடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்துக் செய்தால், சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறைத் தெளிக்கவும்.

Tags :
|