Advertisement

சில அருமையான சமையலறை குறிப்புகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Tue, 21 Feb 2023 10:30:12 PM

சில அருமையான சமையலறை குறிப்புகள் உங்களுக்காக!!!

சென்னை: சில அருமையான சமையலறை குறிப்புகள் உங்களுக்காக. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் நறுக்கி வெய்யிலில் காயவைத்து வற்றல் போல் உலர்த்தி கொள்ள வேண்டும். பிறகு எப்போது ஊறுகாய் வேண்டுமானாலும் அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.

ingredients,cooking,sugar,padam,lemon ,பொருட்கள், சமையல், சீனிப்பாகு, பதம், எலுமிச்சை

தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி அப்படியே இருக்கும். வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால் பாகு முற்றாது.

தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கித் தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது. தயிர் கொண்டு கை கழுவ மண்ணெண்ணெய் வாசம் போய் விடும். வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

சமையலறையில் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களை குறித்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

Tags :
|
|