Advertisement

ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும் சோயா பீன்ஸ் கிரேவி

By: Nagaraj Fri, 25 Aug 2023 10:09:09 AM

ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும் சோயா பீன்ஸ் கிரேவி

சென்னை: கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும் சோயா பீன்ஸ்-ல் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் – 1 கப்தக்காளி – 1வெங்காயம் – 1தேங்காய் – 1/4 கப்கடுகு – 1/2 டீஸ்பூன்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையானஅளவுகொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – தேவையானஅளவு

coconut,health,healthy heart,reduce cholesterol,soy beans,soya beans gravy,vegetable, ,தேங்காய், ஆரோக்கியம், ஆரோக்கியமான இதயம், கொழுப்பைக் குறைக்க, சோயா பீன்ஸ், சோயா பீன்ஸ் குழம்பு, காய்கறி

செய்முறை: முதலில் ஊற வைத்த சோயாவை , கழுவி வேக வைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வதக்கி கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி , பின்பு சோயாவை சேர்த்து கொள்ள வேண்டும் . துருவிய தேங்காய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் கிரேவி தயார்!!!

Tags :
|