Advertisement

சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி?

By: Monisha Sat, 03 Oct 2020 1:02:52 PM

சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி குறித்து இன்று பார்க்கலாம். சோயா பீன்ஸ் அவித்து மற்றும் பொரித்து தாளித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து

soy beans,sundal,coconut,recipe,nutrition ,சோயா பீன்ஸ்,சுண்டல்,தேங்காய்,ரெசிபி,சத்து

செய்முறை
சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் தயார்.

Tags :
|
|