Advertisement

மூட்டு வலியை போக்கி வலிமையை கொடுக்கும் முடக்கதான் கீரை குழம்பு

By: Nagaraj Mon, 19 Sept 2022 8:32:17 PM

மூட்டு வலியை போக்கி வலிமையை கொடுக்கும் முடக்கதான் கீரை குழம்பு

சென்னை: முடக்கத்தான் அல்லது முடக்கறுத்தான் கீரை குழம்பு செய்து உங்கள் ஆரோக்கியத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். மூட்டு வலி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது முடக்கற்றான் கீரை என்கின்ற சிறந்த மருந்து. ஒரு காலத்தில் வயோதியர்களுக்கு தான் மூட்டு மற்றும் முழங்கால் வலி இருக்கும் மூட்டின் தேய்மானத்தின் காரணத்தால்.

ஆனால் இப்பொழுது இளைய தலைமுறையினர்களோ மூட்டு வலி மற்றும் முழ்ங்கால் வலியால் அவதிப்படுகின்றனர். ஏனெனில் பெரும்பாலோர் தகவல் தொழிலில்நுட்ப நிறுவனத்தில் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை பளுவின் காரணமாக ஒரே இடத்தில அசையாமல் இருக்கின்றனர். இதன் காரணத்தினால் சிறிய வயதினிலே மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படுகின்றனர். இந்த முடக்கற்றான் கீரை மூலம் குழம்பு வைத்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டு வலியையும் போக்கி வலிமையை கொடுக்கும்.

தேவையானவை:

முடக்கறுத்தான் கீரை – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 10
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய் தூள்– 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
நாட்டுத் தக்காளி – 2
நல்லெண்ணை- 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

medicinal properties,rheumatism spinach,joint pain,chili powder,tamarind ,மருத்துவகுணம், முடக்கற்றான் கீரை, மூட்டு வலி, மிளகாய் தூள், புளி

செய்முறை: ஒரு எண்ணெய் சட்டியில் நல்லெண்ணையை ஊற்றிய பிறகு முடக்கற்றான் கீரையை போட்டு வதக்கவும். நன்றாக வதக்கியப்பின் மிதமான காற்றில் உளரவிடவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வதக்கிய கீரையை மிக்சியில் போட்டு நல்ல மையாக அரைக்கவும்.

பின்பு அதே எண்ணெய் சட்டியில் நல்லெண்ணையை ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். நன்றாக கடுகு தாளித்தவுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்க வேண்டும். பின்பு அத்துடன் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். நல்ல கொதி வந்தவுடன் குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.


நன்கு குழம்பு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள முடக்கறான் கீரையை போட்டு கலக்கவும். நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த குழம்பை இட்லி, தோசை மாற்று சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த குழம்பை செய்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி போகும். மருத்துவ குணம் கொண்ட கீரைக்கு நல்லெண்ணெய் சேர்ப்பதால் மருத்துவ குணம் கெடாமல் இருக்கும்.

Tags :