Advertisement

முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் செய்முறை

By: Nagaraj Sun, 10 July 2022 9:57:11 PM

முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் செய்முறை

சென்னை: முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் செய்து பாருங்கள். உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். அதன் செய்முறை உங்களுக்காக.

தேவையானவை:

முருங்கைக்கீரை - 5 கப்
சுண்டைக்காய் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

coconut,drumstick,gourd,chili,salt,oil ,தேங்காய், முருங்கைக்கீரை, சுண்டைக்காய், மிளகாய், உப்பு, எண்ணெய்

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுண்டைக்காயைப் பாதியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.

பிறகு கீரையைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் தயார்.

Tags :
|
|
|