Advertisement

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் செய்முறை

By: Nagaraj Fri, 25 Nov 2022 10:34:51 AM

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் செய்முறை

சென்னை: ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் செய்து பார்ப்போம் வாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:
பச்சை மிளகாய் – 20,எள் – 2 டீஸ்பூன்,
சோம்பு அல்லது சீரகம் – 2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்,
கடுகு – 4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

cumin,sesame powder,turmeric powder,green chili,amsoor powder ,சீரகம், எள் பொடி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், ஆம்சூர் பவுடர்

செய்முறை: கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும்


பிறகு சீரகம் – எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். 2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும். பிறகு பயன்படுத்தவும். ருசி பிரமாதமாக இருக்கும்.

Tags :
|