Advertisement

சூப்பர் சுவையில் முருங்கைப்பூ தயிர் பச்சடி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 15 June 2023 08:41:47 AM

சூப்பர் சுவையில் முருங்கைப்பூ தயிர் பச்சடி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: வெங்காய தயிர் பச்சடி, வெள்ளரிக்காய், தக்காளி தயிர் பச்சடி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் உடலுக்கு அதிகளவு ஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ தயிர் பச்சடி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா. இதோ அதன் செய்முறை.

தேவையானவை:
முருங்கைப்பூ – 1 கப்,தயிர் – ½ கப்,தேங்காய்துருவல் – ½ கப்,சீரகம் – 1 ஸ்பூன்,பச்சைமிளகாய் – 2,உப்பு – திட்டமாக.

தாளிக்க:
எண்ணெய் – 1 ஸ்பூன்,கடுகு – 1 ஸ்பூன்,பெருங்காயம் – ¼ ஸ்பூன்,கறிவேப்பிலை – 4.

moringa flower,cumin,coconut,green chillies,oil ,முருங்கைப்பூ, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய், எண்ணெய்

செய்முறை: முதலில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ெணய் ஊற்றி கடுகை போடவும். கடுகு வெடித்ததும், முருங்கை பூவைப் போட்டு சிறிது உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பூ வெந்ததும் அரைத்த விழுதை போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஆறியதும் தயிர் கலந்து மீதி உப்பு சேர்த்து பரிமாறவும். முருங்கைப்பூ மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டது.

Tags :
|