Advertisement

சூப்பர் ருசியில் காரச்சாரமாக வேர்க்கடலை பொடி செய்முறை

By: Nagaraj Thu, 20 Oct 2022 11:08:10 PM

சூப்பர் ருசியில் காரச்சாரமாக வேர்க்கடலை பொடி செய்முறை

சென்னை: அருமையான ருசியில் காரச்சாரமாக வேர்க்கடலை பொடி செய்ய பாருங்கள். ருசி அள்ளும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.


தேவையான பொருட்கள் : வரமிளகாய் – 10, வேர்க்கடலை – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், கறிவேப்பிலை – 2 கொத்து, எண்ணெய் – 1 ஸ்பூன், பூண்டு பல் – 5, உப்பு – சுவைக்கு

idly podi,peanut-idli-podi,side dish,veg recipe ,இட்லி பொடி, வேர்க்கடலை பொடி

செய்முறை : அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வரமிளகாய் போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு பூண்டு பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள காரசாரமான வேர்கடலை பொடி தயார்.

Tags :