Advertisement

சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு செய்முறை

By: Nagaraj Fri, 30 Oct 2020 9:45:47 PM

சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு செய்முறை

அருமையான சுவையில் தக்காளி தொக்கு செய்முறை உங்களுக்காக. இதை சப்பாத்திக்கு தொட்டுக்க கொள்ள சூப்பராக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

தக்காளி - 2,
எண்ணெய் - 3-4 ஸ்பூன்,
கடுகு - 1/2 ஸ்பூன்,
சோம்பு - 1 ஸ்பூன்,
பட்டை - 1,
கிராம்பு- 2,
ஏலக்காய் - 2,
வெங்காயம் - 3,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்,
கரம் மசாலா - 1 ஸ்பூன்,
மல்லித் தூள் - 1 ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு

tomatoes,oil,mustard,anise,bark ,தக்காளி, எண்ணெய், கடுகு, சோம்பு, பட்டை

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பிறகு அதில் கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவை சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பச்சை வாசனை சென்ற உடன் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

10 நிமிடம் கழித்து தொக்கை எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் அப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து தக்காளி தொக்கை இறக்கி விட வேண்டும். இந்த சுவையான தக்காளி தொக்குடன் சப்பாத்தி வைத்துச் சாப்பிட்டால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்.

Tags :
|
|