Advertisement

சூப்பரான வெண்டைக்காய் ப்ரை செய்முறை

By: Nagaraj Tue, 14 June 2022 5:43:42 PM

சூப்பரான வெண்டைக்காய் ப்ரை செய்முறை

சென்னை: வெண்டைக்காய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் மிகவும் முக்கியமான ஒரு காய்கறி. வெண்டைக்காயை ஒரு சில குழந்தைகள் உண்ண பிடிவாதம் பிடிப்பது உண்டு. அப்படி பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்ணக்கூடிய அளவிற்கு பொட்டுக்கடலையுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான வெண்டைக்காய் ப்ரையை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கிலோ
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பொட்டுக்கடலை – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 4 முதல் 5
வரமிளகாய் – 3
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

mung bean,roast,spice,taste,salt,mix ,வெண்டைக்காய், வறுவல், மசாலா, ருசி, உப்பு, கலவை

செய்முறை: முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு அதை எப்போதும் போல வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிய விடவேண்டும். பிறகு அதனுடன் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிவிட்டு அதனுடன் நாம் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து ஓர் இரு நிமிடங்கள் வதக்க வேண்டும். வெண்டைக்காய் சிறிது வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை நீங்கும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை அவ்வவ்போது அதை கிளறிவிட வேண்டும். வெண்டைக்காய் வதங்கி வருவதற்கு இடையில், அதற்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு, ஒரு மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், வரமிளகாய், சீரகம், மிளகு, கொத்தமல்லி விதை, சிறிதளவு கருவேப்பிலை மற்றும் இந்த கலவைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக இருக்கும் அளவிற்கு அரைக்க வேண்டும். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. மசாலா உதிரி உதிரியாக இருப்பது அவசியம். அரைத்து வைத்துள்ள மசாலாவை வெண்டைக்காயோடு சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்க வேண்டும். அவ்வளவு தான், சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.

Tags :
|
|
|
|