Advertisement

குடும்பத்தினருக்கு கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்து அசத்துங்க!!!

By: Nagaraj Sat, 23 Sept 2023 4:59:47 PM

குடும்பத்தினருக்கு கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்து அசத்துங்க!!!

சென்னை: எப்போதும் ஒரே மாதிரிதான் சமைப்பீங்களா அம்மா என்று உங்கள் வீட்டு குழந்தைகள் கேட்கிறார்களா! அப்ப அவங்களை அசத்த கொத்தமல்லி சாதம் செய்து கொடுங்க... அப்புறம் என்ன உங்களையே சுற்றி சுற்றி வருவாங்க.

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப், கொத்தமல்லி கட்டு - 1 கட்டு, இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 1, பட்டை, லவங்கம் - 1, ஏலக்காய் - 1, முந்திரி, உப்பு, நெய் - தேவைக்கு.

roasted cashews,serve,great taste,coriander rice,basmati rice ,வறுத்த முந்திரி, பரிமாறவும், அருமையான சுவை, கொத்தமல்லி சாதம், பாசுமதி அரிசி

எப்படி செய்யணும்: பச்சை கொத்தமல்லியை மண் போக அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ' ஸ்டீம்' வந்ததும் 'வெய்ட்' போடவும் அடுப்பை 'சிம்மில்' 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும். அருமையான சுவையில் கொத்தமல்லி சாதம் ரெடி.

Tags :
|