Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் மக்ரோனி

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:22:08 AM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் மக்ரோனி

குழந்தைகள் விரும்பி சாப்பிட ஸ்வீட் மக்ரோனி செய்து கொடுங்கள். எப்போதும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரி இல்லாமல் சுவையும், இனிப்பும் நிறைந்த இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.

தேவையானவை:

மக்ரோனி- தேவையான அளவு
சர்க்கரைத்தூள் -தேவையான அளவு
தேங்காய்த் துருவல்-2 கரண்டி
செர்ரி, திராட்சை,
டூட்டி ஃப்ரூட்டி 4 மேஜைக் கரண்டி.

macaroni,sugar,grated coconut,cherry grapes ,மக்ரோனி, சர்க்கரை, தேங்காய் துருவல், செர்ரி திராட்சை

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து அதில் மக்ரோனியைச் சேர்த்து, சுமார் 5 நிமிடம் வேக விடவும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரால் அலசி ஆற விட்டபின் 10 நிமிடம் கழித்து, சர்க்கரைத்தூள், தேங்காய்த்துருவல், பழத்துண்டுகளை சேர்த்து பறிமாறவும்.

சத்து நிறைந்த தித்திக்கும் மக்ரோனி சுவையில் அபாரமானது. குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிட்டு இன்னும் கொடுங்கள் என்று கேட்பார்கள்.

Tags :
|