Advertisement

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பேபிகார்ன் வெஜிடபிள் நூடுல்ஸ் செய்முறை

By: Nagaraj Fri, 17 June 2022 3:52:07 PM

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பேபிகார்ன் வெஜிடபிள் நூடுல்ஸ் செய்முறை

சென்னை: குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அதனுடன் பேபிகார்ன் சேர்த்து கொடுக்கும் போதும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ருசியாக பேபி கார்ன் வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட்பேபி கார்ன் - 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது)கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்ஸ்பிரிங் ஆனியன் - சிறிதுமிளகுத் தூள் - 1 டீஸ்பூன்ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு

soy sauce,babycorn,carrots,cabbage,wedges,garlic ,சோயா சாஸ், பேபிகார்ன், கேரட், முட்டைக்கோஸ்,  குடைமிளகாய், பூண்டு

செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|