Advertisement

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான முட்டைப்பணியாரம் செய்முறை

By: Nagaraj Tue, 04 Aug 2020 10:52:28 AM

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான முட்டைப்பணியாரம் செய்முறை

தினம் தினம் ஆம்லெட், அவியல், முட்டை பொறியல் என்று இல்லாமல் முட்டைப் பணியாரமும் செய்து அசத்துங்கள். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

தேவையானவை


முட்டை - 2

பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இட்லி மாவு - 2 கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

eggplant,onion,green chillies,curry leaves ,முட்டை பணியாரம், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை

செய்முறை: ஒரு பவுலில் இட்லி மாவுடன் உடைத்த முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்து இட்லி மாவில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் கால்வாசி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இனி, கலந்து வைத்துள்ள இட்லி முட்டை மாவுக் கலவையை ஒவ்வொரு பணியாரக் குழியிலும் ஊற்றி வேகவிடவும்.

வெந்ததும் ஒரு குச்சியால் பணியாரத்தைத் திருப்பிவிட்டு மறுபக்கமும் வேகவைத்து சூடாக எடுத்துப் பரிமாறவும். அருமையான சுவையில் இருக்கும். இதனை குழந்தைகள் ரசிதது சாப்பிடுவார்கள்.

Tags :
|