Advertisement

சூப்பர் சுவையில் ஓட்டலில் செய்வது போல் பாஸ்தா செய்முறை

By: Nagaraj Thu, 11 June 2020 6:42:35 PM

சூப்பர் சுவையில் ஓட்டலில் செய்வது போல் பாஸ்தா செய்முறை

இத்தாலி உணவு வகைகளில் ஒன்றான பாஸ்தாவை ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்வது பற்றி தெரிந்து கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கு காலை டிபனாக ரெடி செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடைமிளகாய் - 1
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள், மிளகு தூள் - தலா 1 டீஸ்பூன்
சீரகப் பொடி, கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

pepper powder,pasta,garam masala,chili sauce,chili powder ,மிளகு தூள், பாஸ்தா, கரம் மசாலா, சில்லி சாஸ், மிளகாய் தூள்

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

காய்கள் நன்கு வெந்ததும் தக்காளி சாறு, சில்லி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனபின்னர் இதில் பாஸ்தாவை போட்டு கிளறிவிடவும். இதன்மேல் கொத்தமல்லிக்தழை தூவி இறக்கினால் சுவையான இத்தாலியன் பாஸ்தா ரெடி. ஓட்டல் சுவையில் வீட்டில் தயாரித்து கொடுத்து பாருங்கள் உங்களையே சுற்றி வருவார் உங்கள் வீட்டு குட்டி சுட்டீஸ்.

Tags :
|