Advertisement

கிராமத்து சுவை மாறாமல் வெண்டைக்காய் காரக்குழம்பு செய்முறை

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:35:04 PM

கிராமத்து சுவை மாறாமல் வெண்டைக்காய் காரக்குழம்பு செய்முறை

சென்னை: கிராமத்து சுவை மாறாமல் வெண்டைக்காய் கார குழம்பு செய்வோம். வாருங்கள். இதன் ருசி செமையாக இருக்கும்.

தேவையானவை
வெண்டைக்காய்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு
புளி தண்ணீர் - கால் கப்

தாளிக்க:

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
கறிவேப்பிலை, கொத்தமல்லி

 ,வெண்டைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள்

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயத்தின் நிறம் மாறி, வெண்டைக்காயும் பாதி வெந்ததும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். (விரும்பினால் தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்) தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, தூள் வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தூளின் வாசம் குறைந்து காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார். கிராமத்து ருசி மாறாமல் இருக்கும். இதை உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களையும் பாராட்டுவார்கள்.

Tags :