Advertisement

இந்த தீபாவளிக்கு ரவையை வைத்து மிக எளிதாக சுவையான ஸ்வீட் செய்யுங்க

By: vaithegi Thu, 09 Nov 2023 11:41:49 AM

இந்த தீபாவளிக்கு ரவையை வைத்து மிக எளிதாக சுவையான ஸ்வீட் செய்யுங்க

ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக உதவும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். இதையடுத்து ரவையை வைத்து சுவையான பெங்காலி ஸ்வீட் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.

தேவையானவை பொருள்கள்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
ரவை – அரை கப்
பால் – 3/4 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
சீனி – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன்
பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை விளக்கம்

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி, நெய் சூடான பின்பு அதனுள் ரவை அரைக்கப் போட்டு பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.

sweet,semolina ,ஸ்வீட் , ரவை

பின்பு அதனுள் முக்கால் கப் பாலை ஊற்றி நன்கு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு சுகர் சிரப் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் சீனி 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதத்துக்கு வரும் வரை சூடேற்றி அதனுள் சிறிதளவு ஏலக்காய் தோலை போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் தயார் செய்து வைத்துள்ள ரவையில் ஏலக்காய் பொடி, சிறிதளவு பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் பால் பவுடர் இவற்றை சேர்த்து அதனுள் அரைக்கப் பால் ஊற்றி நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்பு தயார் செய்து வைத்து உள்ள இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பொரித்தெடுத்தவற்றை சுகர் சிரப்பில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிட்டு பரிமாறினால் சுவையாக இருக்கும். மிகவும் சுவையான பெங்காலி ஸ்வீட் ரெடி.

Tags :
|