Advertisement

டிப்ஸ்... டிப்ஸ்... சமையல் டிப்ஸ்... உங்களுக்காக...!

By: Nagaraj Fri, 10 Nov 2023 11:15:20 PM

டிப்ஸ்... டிப்ஸ்... சமையல் டிப்ஸ்... உங்களுக்காக...!

சென்னை: நாம நல்லா அறிந்த விஷயங்களில் அறியாத சில விஷயங்களை தெரிந்து கொள்வோமா? நல்லா சாப்பிட தெரியும்... அதையே இன்னும் ருசியாக்குவது எப்படி தெரிஞ்சுக்குவோமா!

எலுமிச்சை சாதம் செய்யும் போது அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். அப்புறம் என்ன புளிப்பா இருக்கு என்று சொல்லும் குழந்தைகள் கூட அம்மா... இன்னும் கொஞ்சம் எலுமிச்சை சாதம் கொடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க...

சப்பாத்தி செய்யும் போது முதலில் சூடான பால், உப்பு மற்றும் மாவு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். இப்படி செய்வதால் மாவு மிருதுவாகும். அப்புறம் உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி தேய்க்கும் போது மிருதுவான சப்பாத்தி தயார். அப்புறம் என்ன 2 சப்பாத்தி போதும் சொல்லி எழும் பொக்கை வாய் தாத்தா கூட இன்னும் 2 வைம்மா பேத்தி என்பார்.

soya beans,relish,salt,dosa,milk,salt ,சோயா பீன்ஸ், சுவை, உப்பு, தோசை, பால், உப்பு

சாப்பாடு ஓகே.... அதுக்கு தொட்டுக் கொள்ள பொ‌ரியல் செய்யும் போது அதில் சிறிதளவு சோயா சாஸ் சேர்த்தால் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். சாஸில் உப்பு இருப்பதால் இதை சேர்க்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம். அட போன வாரம் செஞ்சதை விட இது சூப்பராக இருக்கே... இதே மாதிரி செய்யும்மா என்பார்கள்.
வீட்டில் சர்க்கரை நோயாளி இருக்காங்களா? சோயாபீன்ஸ் 1 கிலோ, புழுங்கலரிசி 1 கிலோ, உளுந்து 200 கிராம் சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது தோசை வார்த்து கொடுக்கலாம்.

Tags :
|
|
|
|