Advertisement

சூப்பர் சுவையில் மணத்தக்காளி கீரை கூட்டு செய்து பாருங்கள்

By: Nagaraj Sun, 29 Jan 2023 11:06:37 PM

சூப்பர் சுவையில் மணத்தக்காளி கீரை கூட்டு செய்து பாருங்கள்

சென்னை: மணத்தக்காளி கீரைக் கூட்டு செய்து கொடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் நல்லது. இதை அருமையான ருசியில் செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:
மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு.சின்ன வெங்காயம் - இரண்டு.தக்காளி - ஒன்று.பூண்டு - 4 பல்.பச்சை மிளகாய் - 2.மஞ்சள் தூள் - அரை சிட்டிகை.சீரகத்தூள் - அரை சிட்டிகை.மிளகுத்தூள் - கால் சிட்டிகை.பாசிப்பருப்பு - ஒரு கையளவு.உப்பு - தேவைக்கு.தாளிக்க எண்ணெய் - சிறிதளவு.சீரகம் - அரை சிட்டிகை.உளுத்தம் பருப்பு - ஒரு சிட்டிகை.மிளகாய் வற்றல் - 2.தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி.

onion,tomato,garlic,green chilli,turmeric,cumin ,வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள், சீரகம்

செய்முறை: நறுக்கிய கீரை, பாதி வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள், சீரகம் / மிளகுத் தூள்கள் இவற்றுடன் ஊறிய பாசிப்பருப்பை தண்ணீருடன் சேர்த்து மண்சட்டியில் வேக வைக்க வேண்டும். கீரைக்கு மண்சட்டிதான் பிரதானம். வெந்திருக்கும் கீரையை மத்து அல்லது அகப்பை கொண்டு கடைந்து மசித்து வைக்கவும்.

ஒரு கடாயில் குறைவாக எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, வற்றல் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பாதி வெங்காயம் போட்டு வதக்கவும். கடைந்த கீரையில் சிறிது உப்பையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து பிரட்டவும்.

பிறகு தாளித்ததை சேர்த்து கீரையை கலந்து விடவும். அருமையான ருசியில் மணத்தக்காளி கீரை கூட்டு ரெடி.

Tags :
|
|
|