Advertisement

தேங்காய் சட்னியை ஒரு முறை இந்த மாதிரி செஞ்சு பாருங்க

By: vaithegi Sun, 20 Aug 2023 5:31:28 PM

தேங்காய் சட்னியை ஒரு முறை இந்த மாதிரி செஞ்சு பாருங்க


தேங்காய் சட்னி பெரும்பாலோனருக்கு பிடிக்கும் என்றாலும் ஒரு சிலருக்கு தேங்காய் ஒத்துக் கொள்ளாது என்று சாப்பிட மாட்டார்கள். இந்த முறையில் சட்னி அரைத்தால் அது போல தொந்தரவு உள்ளவர்கள் கூட தாராளமாக சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1, சின்ன வெங்காயம் – 5, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 5, காய்ச்சிய பால் – 1 கப், கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, உப்பு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை விளக்கம்:
இந்த சட்னி அரைக்க முதலில் தேங்காவை உடைக்காமல் முழுதாக அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். இதை குக்கரில் வைத்து தேங்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரே ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். குக்கரில் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடியை திறந்து தேங்காயை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். தேங்காய் நன்றாக ஆற வேண்டும்.

அதன் பிறகு இந்த தேங்காயை உடைத்து அதில் இருக்கும் தேங்காய் சில்லை எடுத்து விடுங்கள். வேக வைத்த பின்பு எடுப்பதால் தேங்காய் ஓட்டிலிருந்து எளிதாக வந்து விடும். அதன் பிறகு ஓட்டிற்கு பின்னால் இருக்கும் தோலை நீக்கிய பிறகு தேங்காய் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயை இப்படி சேர்ப்பதன் மூலம் சட்னி ருசியாக இருப்பதுடன், வெள்ளை வெளேரென்று பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்.

coconut chutney,coconut ,தேங்காய் சட்னி,தேங்கா

இதற்கு அடுத்ததாக இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் என அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் சேர்க்காமல் ஒரு முறை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னிக்கு தண்ணீருக்கு பதிலாக பாலை ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சட்னி நல்ல நைசாகவே அரைத்துக் கொள்ளலாம்.

இப்போது அரைத்த இந்த சட்னி ஒரு பவுலுக்கு மாற்றிய பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து சட்னியை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை சேர்த்து இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி விடுங்கள். சுவையான தேங்காய் சட்னி அட்டகாசமாக தயார்.

Tags :