Advertisement

அருமையான ருசியில் முட்டை 65 செய்து பாருங்கள்

By: Nagaraj Mon, 20 June 2022 7:59:34 PM

அருமையான ருசியில் முட்டை 65 செய்து பாருங்கள்

சென்னை: அசைவ உணவுகளை சாப்பிட விரும்பாதவர்கள் கூட சாப்பிடக்கூடிய உணவு வகையாக முட்டை இருக்கிறது. முட்டையை அவித்து, வறுத்து என பலவகையில் உண்கிறோம். அப்படி முட்டையை சமைத்து உண்ணும் ஒரு முறை தான் முட்டை 65. இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் – 1டேபிள்ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பல் சீரகம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிது சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் புட் கலர் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணை – தேவைகேற்ப.

eggs,corn,anise,chilli,garlic,cumin ,முட்டை, சோளமாவு, சோம்பு, மிளகாய்தூள், பூண்டு, சீரகம்

செய்முறை:முட்டைகளை நன்கு வேக வைத்து எடுத்துக்கொண்டு சமமான அளவில் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் அல்லது ஒரு முட்டையை நீள வாக்கில் இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய் தூள் ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சிறிதளவு சோள மாவு, புட் கலர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வெட்டி வைத்த முட்டை துண்டுகளை இந்த மசாலா கலவையில் நன்கு தோய்த்து, ஒரு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியில் நல்லெண்ணை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதில் இந்த முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் முட்டை 65 தயார். ருசியும் அபாரமாக இருக்கும்.

Tags :
|
|
|
|
|