Advertisement

கிளியனூர் மசால் வடை குழம்பு செய்து பாருங்கள்

By: Nagaraj Mon, 05 June 2023 7:07:56 PM

கிளியனூர் மசால் வடை குழம்பு செய்து  பாருங்கள்

சென்னை: கிளியனூர் மசால் வடை குழம்பு செய்து பார்த்து இருக்கீங்களா. இதோ செய்முறை உங்களுக்காக.

தேவை: கடலைப் பருப்பு – 1 ஆழாக்கு, சோம்பு – ½ டீஸ்பூன், புளி – 1, எலுமிச்சை அளவு, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மஞ்சள் பொடி, சின்ன வெங்காயம் – 3 கை, நறுக்கிய தக்காளி – 2 கை, தேங்காய்த் துருவல் – ¼ மூடி, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – தேவைக்கு.

தாளிக்க: கடுகு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, வெந்தயம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, சோம்பு – ½ டீஸ்பூன்.

onions,green chillies,salt,aniseed,dals,curry leaves ,வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சோம்பு, வடைகள், கரகரப்பு

செய்முறை: ஒரு மணி நேரம் ஊறிய கடலைப் பருப்புடன், பாதி அளவு வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு, சோம்பு சேர்த்து கரகரப்பாக அடைத்த, வடையாகத் தட்டிக் கொள்ளவும்.

புளிக்கரைசலில், உப்பு, குழம்புப் பொடியைக் கலந்து, நன்றாகக் கொதிக்கும்பொழுது, தட்டிய வடைகளைப் போடவும். தேங்காயை அரைத்துவிட்டு சேர்ந்து கொதித்ததும் இறக்கி தாளிக்கவும்.

Tags :
|
|
|