Advertisement

சுவை மிகுந்த ப்ரெட் ஸ்வீட் பால் செய்து பாருங்கள்

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:32:55 PM

சுவை மிகுந்த ப்ரெட் ஸ்வீட் பால் செய்து பாருங்கள்

சென்னை: ஹெல்த்தி மற்றும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றால் ப்ரெட் ஸ்வீட் பால்ஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையானவை:

ப்ரெட் - 10
கன்டண்ஸ்டு மில்க் - அரை கப்
கோகனெட் பவுடர் - கால் கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
முந்திரி (உடைத்தது) - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு

bread crumbs,coconut powder,cashews,condensed milk,vanilla essence ,ப்ரெட் துண்டுகள், கோகனெட் பவுடர், முந்திரி, கன்டண்ஸ்டு மில்க், வெனிலா எசன்ஸ்

செய்முறை: ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு சிறிய துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். (விரும்பினால் ப்ரெட்டை மிக்ஸியில் போட்டு தூள் செய்து கொள்ளலாம்).
ப்ரெட் துண்டுகளுடன் கோகனெட் பவுடர், முந்திரி, கன்டண்ஸ்டு மில்க் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள ப்ரெட் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். டேஸ்டி ப்ரெட் ஸ்வீட் பால்ஸ் ரெடி. இதன் சுவை கிட்டத்தட்ட குலோப் ஜாமுன் சுவை போல இருக்கும்.

Tags :