Advertisement

குடும்பத்தினர் பாராட்டுக்களை பெற ருசியாக பூசணி சாம்பார் செய்து பாருங்கள்

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:26:36 PM

குடும்பத்தினர் பாராட்டுக்களை பெற ருசியாக பூசணி சாம்பார் செய்து பாருங்கள்

சென்னை: ருசியாக பூசணி சாம்பார் செய்து பார்ப்போம். குடும்பத்தினர் பாராட்டை பெற இதை செய்து பாருங்கள். ஆரோக்கியம் நிறைந்தது.

தேவையான பொருட்கள் :
தக்காளி – 1சாம்பல் பூசணிக்காய்கால் – 1 கிலோபெரிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2-4 எண்ணிக்கைமிளகாய் வத்தல் – 2தேங்காய் துருவல் – 1/4 கப்பருப்பு – 2 கப்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்பூண்டு – 6 துண்டுகள்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவைக்கேற்பஉப்பு – தேவைக்கேற்ப

lentils,turmeric powder,cumin powder,garlic,pumpkin ,பருப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு, பூசணிக்காய்

செய்முறை: குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும்.

பருப்பு வெந்ததும் அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், மல்லி இலை மற்றும் உப்பு சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த தேங்காயை பூசணிக்காய் மற்றும் பருப்புடன் சேர்த்து குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் தயார்.

Tags :
|