Advertisement

காலிபிளவரில் சுவை மிகுந்த குழம்பு செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:55:33 AM

காலிபிளவரில் சுவை மிகுந்த குழம்பு செய்து பாருங்கள்!!!

சென்னை: சுவையான காலிபிளவர் குழம்பை இந்த முறையில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
காலி பிளவர் = 1 பெரிய பீஸ்உப்பு = தேவையான அளவுமஞ்சள்தூள் = 1 ஸ்பூன்கருவேப்பிலை = 1 சின்ன கட்டுகொத்தமல்லி தழை = 1 சின்ன கட்டுதக்காளி = 1 பெரிய பீஸ்கடுகு = 1 ஸ்பூன்உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்எண்ணெய் = தேவையான அளவுசின்ன வெங்காயம் = 7 பீஸ்சீரகம் = 1 ஸ்பூன்சோம்பு = 1 ஸ்பூன்பட்டை = 2 பீஸ்கிராம்பு = 4 பீஸ்வரமிளகாய் = 3 பீஸ்தனியா = 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்தேங்காய் துருவல் = 1/4 கப்பு

caraway leaves,galli flower,salt,tomatoes, ,உப்பு, கருவேப்பிலை, காலி பிளவர், மஞ்சள்தூள்

செய்முறை: முதலில் காலிபிளவர்யை நன்கு சுத்தம்செய்து கழுவவும். தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்து அதில் காலிபிளவர்யை அலசிபோட்டு கொஞ்சநேரம் ஊறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, சீரகம்,. உளுத்தம்பருப்பு, பட்டை,கிராம்பு, தனியா,வர மிளகாய், தனியா, சின்னவெங்காயம், கருவேப்பிலை ஆகியவை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆர வைத்துஅதனுடன் தேங்காய் துருவல் இஞ்சி பூண்டு பேஸ்ட்சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த உடன் பொடியாக நறுக்கிய தக்காளி,கடுகு சேர்த்து வதக்கவும்.

இப்போது கொதிக்கவைத்த தண்ணீரில்உள்ள காலிபிளவர்இன் தண்ணீரைவடிகட்டி அதனை குக்கரில் வதக்கிய பொருட்களுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு குக்கரைமூடி 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

குழம்பு தயார் ஆனதும் கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும். சுவையான காலிபிளவர் குழம்பு தயார்.

Tags :
|