Advertisement

ஆரோக்கியத்தை அளிக்கும் கேரட், வெள்ளரி சாலட் செய்து பாருங்கள்

By: Nagaraj Fri, 04 Aug 2023 11:38:49 PM

ஆரோக்கியத்தை அளிக்கும் கேரட், வெள்ளரி சாலட் செய்து பாருங்கள்

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் கேரட், வெள்ளரி சாலட் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

கேரட், தக்காளி – 2பெரிய வெங்காயம் – 2வெள்ளரிக்காய் – 1பச்சை மிளகாய் – 1எலுமிச்சைச் சாறு – சிறிதளவு

carrot,cucumber salad,salt,lemon juice,onion ,கேரட், வெள்ளரி சாலட்,  உப்பு, எலுமிச்சை சாறு, வெங்காயம்

செய்முறை: முதலில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்ததும், அதனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிது கிளறி சாப்பிடலாம். இதை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Tags :
|
|