Advertisement

தினை அரிசியில் அல்வா செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Mon, 26 Sept 2022 11:42:10 AM

தினை அரிசியில் அல்வா செய்து பாருங்கள்!!!

சென்னை: சிறுதானியங்களில் ஏராளமான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் தினை அரிசியில் அல்வா செய்முறையை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, சுக்குத்தூள் - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம், நெய் - 100 கிராம்.

millet rice flour,jaggery,cardamom powder,sugar powder,cashews,raisins ,தினை அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்த் தூள், சுக்குத்தூள், முந்திரி, திராட்சை

செய்முறை:தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக் கொள்ளவும்.

இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும். இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.

Tags :